மாநில செய்திகள்

மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு: மம்தா பானர்ஜி உள்ளிட்ட 13 பேருடன் ஸ்டாலின் பேச்சு + "||" + OBC Reservation issue : Mk Stalin speech with 13 leaders

மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு: மம்தா பானர்ஜி உள்ளிட்ட 13 பேருடன் ஸ்டாலின் பேச்சு

மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு: மம்தா பானர்ஜி உள்ளிட்ட 13 பேருடன் ஸ்டாலின் பேச்சு
மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற அழுத்தம் தரக்கோரி, சோனியா காந்தி உள்ளிட்ட 13 தலைவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளில்  தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்விதத் தடையும் இல்லை எனத் தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்,   மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற  திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக  மத்திய அரசுக்கு அழுத்தம் தர சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.  மம்தா பானர்ஜி, ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 13 தலைவர்களுடன்  ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பேசினார்.