மாநில செய்திகள்

விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க பிஜேபி நினைக்கிறது அதிமுகவின் நோக்கமும் இதுதானா ? திமுக எம்.,பி கனிமொழி கேள்வி + "||" + The BJP thinks this is the aim of the AIADMK to destroy the livelihood of the farmers Kanimozhi question

விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க பிஜேபி நினைக்கிறது அதிமுகவின் நோக்கமும் இதுதானா ? திமுக எம்.,பி கனிமொழி கேள்வி

விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க பிஜேபி நினைக்கிறது அதிமுகவின் நோக்கமும் இதுதானா ? திமுக எம்.,பி கனிமொழி கேள்வி
பாஜகவை போல அதிமுகவும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை பறிக்கும் நோக்கத்தில் உள்ளதா என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்பதால் இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் திமுக எம்.பி.,கனிமொழி டுவிட்டர் பதிவில்,


சேலம் 8 வழிச்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்கிறது மத்திய அரசு. ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமான விளை நிலங்களை இழப்பதோடன்றி, காடுகளும் அரிய வகை உயிரினங்களும் அழிக்கப்படும் இத்திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க பிஜேபி நினைக்கிறது. அதிமுகவின் நோக்கமும் இதுதானா ? என பதிவிட்டுள்ளார்.