தேசிய செய்திகள்

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளது; மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் + "||" + Covid-19 update: Smokers more vulnerable to coronavirus transmission, says Health ministry

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளது; மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளது;  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா எளிதில் பரவ வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு  கொரோனா எளிதில் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், “  புகைப்பழக்கம் உள்ளவர்களின் , கையில் தொற்றிய கொரோனா வைரஸ், வாய்க்கு எளிதாகச் செல்லும் வாய்ப்பு அதிகமாக  உள்ளது.  புகைப்பிடிக்கும் போது, கைவிரல்கள் வாய்ப்பகுதியை தொடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், புகைப்பிடிப்பவர்களுக்கு மற்றவர்களை விட கொரோனா எளிதில் பரவும். 

அது மட்டுமல்லாமல், புகைப்பிடிப்பவர்களுக்கு, புகைப்பழக்கத்தால், நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படும், நோய் எதிர்ப்பு சக்திக் குறைந்து, கொரோனா தொற்றுக்கு எதிராக போரிடும் சக்தியை இழந்துவிடும்.

இதுபோலவே இதர புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவோருக்கும், கொரோனா தொற்றுப் பரவல் ஏற்படும் அபாயம் அதிகமாக  உள்ளது. புகையிலை பொருட்கள் பயன்படுத்துபவர்கள், பொது இடங்களில் எச்சில்  துப்பும் போது அவை மூலமாக மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாடு உள்பட கொரோனா அதிகம் பாதித்த 8 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை
தமிழ்நாடு உள்பட கொரோனா அதிகம் பாதித்த 8 மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
2. குளியலறையில் தவறி விழுந்த மூதாட்டியை கொரோனா வார்டில் அனுமதித்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் ; சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்த பரிதாபம்
திரிபுராவில் குளியலறையில் தவறி விழுந்த மூதாட்டியை கொரோனா வார்டில் அனுமதித்ததுடன், அங்கு சிகிச்சை எதுவும் அளிக்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
3. மண்டல, மகரவிளக்கு சீசனுக்குசபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி -கேரள மந்திரி தகவல்
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் கூறினார்.
4. கொரோனா தொற்றால் கடலூர் பெண் சர்வேயர் உயிரிழப்பு
கடலூர் பெண் சர்வேயர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
5. பழனி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா-தனியார் மருத்துவமனையில் அனுமதி
பழனி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமாருக்கு கொரோனா தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டது. மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.