தேசிய செய்திகள்

புதிய கல்விக்கொள்கை - மாற்றங்கள் என்ன? உயர்கல்வித்துறை செயலர் விளக்கம் + "||" + Cabinet approved National Education Policy 2020; Major reforms in higher education include a target of 50% gross enrollmen

புதிய கல்விக்கொள்கை - மாற்றங்கள் என்ன? உயர்கல்வித்துறை செயலர் விளக்கம்

புதிய கல்விக்கொள்கை - மாற்றங்கள் என்ன? உயர்கல்வித்துறை செயலர் விளக்கம்
புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
புதுடெல்லி

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கல்விக்கொள்கை குறித்து மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

*கல்வித்துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

* 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம்  எந்த மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.

* மத்திய மனித வள அமைச்சகம் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
* 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடையவே புதிய கல்விக்கொள்கை

* உயர்கல்வி அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்.

* முதல் ஆண்டில்  பழைய மற்றும் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்.

* 2 ஆம் ஆண்டில் புதிய கல்விக்கொள்கை முழுமையாக அமலில் இருக்கும்.

* பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள், ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பை   தொடரலாம்.

*15 ஆண்டுகளில் இணைப்புக்கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும்.

*எம்.பில் படிப்புகள் நிறுத்தபடுவதாக புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு

*நாடு முழுவதும் ஒரே கல்வித்தரம் கொண்டு வரப்படும்.

* கல்வி அறிவு குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும்.

*  தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும்.

* இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் வெளியிடப்படும். 

* பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

*கல்வி கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு`
கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. இதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2. புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும்: முதல்வருக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடிதம்
புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று முதல்வருக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.
3. புதிய கல்விக்கொள்கை: முதல் அமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் கேபி அன்பழகன் நாளை ஆலோசனை
புதிய கல்விக்கொள்கை: முதல் அமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் கேபி அன்பழகன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்
4. எனது எச்சரிக்கையை கேட்க மறுக்கிறார்கள் ; மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
கொரோனா குறித்தும், இந்திய பொருளாதாரம் குறித்தும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்று மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
5. ஹேக்கிங் பிரச்சினை: டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்
ஹேக்கிங் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் விடுத்துள்ளது.