தேசிய செய்திகள்

ரபேல் விமானம்: இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை என பிரதமர் மோடி புகழாரம் + "||" + Prime Minister Narendra Modi tweets in Sanskrit welcoming Rafale fighter jets in India

ரபேல் விமானம்: இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை என பிரதமர் மோடி புகழாரம்

ரபேல் விமானம்: இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை என பிரதமர் மோடி புகழாரம்
ரபேல் விமானம் இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
புதுடெல்லி,

பிரான்ஸில் இருந்து புறப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இன்று மாலை 3 மணிக்கு அரியானாவின் அம்பாலா விமான படை தளத்தில் பாதுகாப்பாக தரை இறங்கின. அங்கு ரபேல் போர் விமானங்களுக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரபேல் விமானங்களை விமான படைத் தளபதி ராகேஷ் பதோரியா முறைப்படி வரவேற்றார்.


கேப்டன் ஹர்கிரத் சிங் தலைமையிலான இந்திய விமானிகள் ரபேல் விமானங்களை இயக்கி தாயகம் எடுத்து வந்தனர். ரபேல் ஒப்பந்தத்தை இறுதி செய்த ராகேஷ் பதோரியா பெயரின் முதல் எழுத்துக்களை கொண்டு ஆர்.பி 001 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

1997 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சுகோய்-30 போர் விமானங்கள் இந்திய படையில் சேர்க்கப்பட்டன.23 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ராணுவ வரலாற்றில் மற்றொரு மைல்கல் நிகழ்வு ஆகும். தங்க அம்புகள் என்ற படை பிரிவில் புதிய ரபேல் விமானங்கள் இயங்க உள்ளன.

இந்நிலையில் ரபேல் விமானத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில், இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை. 
தேசத்தைப் பாதுகாப்பதை விட பெரிய ஆசீர்வாதம் எதுவுமில்லை, தேசத்தைப் பாதுகாப்பது ஒரு நல்ல செயல், தேசத்தைப் பாதுகாப்பதே சிறந்த யாகம். இதைத் தாண்டி எதுவும் இல்லை என புகழாரம் சூட்டி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. வீர சாவர்க்கரின் துணிவிற்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் மோடி புகழாரம்
வீர சாவர்க்கரின் பிறந்த நாளில் அவரது துணிவிற்கு தலை வணங்குகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.