மாநில செய்திகள்

அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றினால் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும்: முதல்வர் பழனிசாமி + "||" + Covid 19 Transmissiln Under control in TN

அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றினால் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும்: முதல்வர் பழனிசாமி

அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றினால் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும்: முதல்வர் பழனிசாமி
காய்ச்சல் முகாம்களால் கொரோனா தொற்று தடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்

சென்னை,

மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முதல் அமைச்சர் பழனிசாமி  பேசினார். அப்போது அவர் கூறியதாவது:  கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டாலும்  அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி  கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.

நியாய விலைக்கடை மூலம் முகக்கவசம் இலவசமாக வழங்கப்படும். சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக  கொரோனா பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. காய்ச்சல் முகாம்களால் கொரோனா தொற்று தடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகள் உள்ளன.

இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை தமிழகத்தில் தான் செய்யப்படுகிறது. மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். கடைகளுக்கு சென்றால் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.  அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றினால் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும். அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
2. இந்தியாவில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 49 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில், கொரோனா பாதித்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 48 ஆயிரத்து 900 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
3. மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு
மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
4. மராட்டியத்தை புரட்டி எடுக்கு கொரோனா: இன்று மேலும் 11,514 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 11,514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் புதிய உச்சம்: கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 904- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.