தேசிய செய்திகள்

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்: மத்திய அரசு + "||" + New Education Policy live | Medium of instruction to be mother tongue or regional language till Class V

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்: மத்திய அரசு

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்:  மத்திய அரசு
புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்னென்ன மொழிகள் என்பதை மாநில அரசுகள் முடிவு செய்யும் என்ரு மத்திய அரசு தெரிவித்துள்ளது.பள்ளி மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதம் ஒரு விருப்ப மொழியாக இருக்கும். சமஸ்கிருதம் மட்டும் இல்லாமல் இதர தொன்மை மொழிகளும் விருப்ப மொழிகளாக இருக்கும்

5 ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம். 15 ஆண்டுகளில் இணைப்பு கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும்.இந்திய மொழிகளுக்கான இலக்கியம், அறிவியல் பூர்வ வார்த்தைகளை கண்டறிய கவனம் செலுத்தப்படும்.மாநில மொழிகளுக்கு இணையாக புதிய கல்வி கொள்கையில் பாட திட்டங்கள் இருக்கும்*மாநில மொழிகளில் கல்வி கற்க இணையதளம் மூலம் மாணவர்களுக்கு பாட திட்டங்கள் அறிமுகம்.

நாடு முழுவதும் கல்வித்தரம் ஒரே மாதிரியாக அமைந்திருக்கும். பள்ளிப்படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தொழில்திறன் இருக்கும் .  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டம் - திமுக தலைவர் ஸ்டாலின்
புதிய கல்விக்கொள்கை மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வரும் திட்டம் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.