தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் புதிதாக 5,503 பேருக்கு தொற்று: ஒரே நாளில் 92 பேர் பலி + "||" + 5,503 COVID19 cases, 2,397 discharged, & 92 deaths reported in Karnataka in the last 24 hours.

கர்நாடகத்தில் புதிதாக 5,503 பேருக்கு தொற்று: ஒரே நாளில் 92 பேர் பலி

கர்நாடகத்தில் புதிதாக 5,503 பேருக்கு தொற்று: ஒரே நாளில் 92 பேர் பலி
கர்நாடகத்தில் புதிதாக 5,503 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது.  இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகம் 4-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கர்நாடகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,503 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,12,504 ஆக உள்ளது.  இன்று 92 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  2,155  ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,397 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 67,448 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.