தேசிய செய்திகள்

ரபேல் விமானங்களைப் பெற்ற இந்திய விமானப்படைக்கு காங்கிரஸ் வாழ்த்து + "||" + We congratulate the Indian Air Force on receiving the Rafale jets Congress

ரபேல் விமானங்களைப் பெற்ற இந்திய விமானப்படைக்கு காங்கிரஸ் வாழ்த்து

ரபேல் விமானங்களைப் பெற்ற இந்திய விமானப்படைக்கு காங்கிரஸ் வாழ்த்து
ரபேல் ஜெட் விமானங்களைப் பெற்ற இந்திய விமானப்படைக்கு, காங்கிரஸ் கட்சி, தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் விமானங்களில், முதல் கட்டமாக 5 விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்தன. அரியானா மாநிலம் அம்பாலா விமான படை தளத்திற்கு வந்திறங்கிய விமானங்களுக்கு முறைப்படி வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. ரபேலின் வருகைக்கு  பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை என்றும் அவர்  புகழாரம் சூட்டியுள்ளார்.


இந்நிலையில்  ரபேல் ஜெட் விமானங்களைப் பெற்ற இந்திய விமானப்படைக்கு, காங்கிரஸ் கட்சி, தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

2012 இல் ரபேலை அடையாளம் கண்டு வாங்குவதில், காங்கிரஸ் அரசாங்கத்தின் உழைப்பு இறுதியாக பலனைத் தந்தது என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரபேல் ஒப்பந்தத்தில், காங்கிரஸ் மற்றும் பாஜக  இடையில் வேறுபாடு அதிகம் இருப்பதாகவும், பாஜக அதில் பல மோசடி செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரபேல் கொள்முதல் பாஜகவின் 36 க்கு பதிலாக, 126 ஜெட் விமானங்களைப் பெறுவதை காங்கிரஸ் உறுதி செய்திருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 108 ரபேல் ஜெட் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்றும், காங்கிரஸ் கூறியுள்ளது.