தேசிய செய்திகள்

கேரளாவில் 903 பேருக்குக் கொரோனா தொற்று + "||" + Kerala recorded 903 new COVID-19 cases & 641 recoveries today

கேரளாவில் 903 பேருக்குக் கொரோனா தொற்று

கேரளாவில் 903 பேருக்குக் கொரோனா தொற்று
கேரளாவில் இன்றைய பரிசோதனையில் 903 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரள சுகாதார மந்திரி கே.கே.ஷைலஜா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேரளாவில் இன்றைய பரிசோதனையில் 903 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்பு மற்றும் அறியப்படாத தொடர்புகளின் மூலம் 706 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.


இன்று தொற்று கண்டறியப்பட்டவர்களில் 90 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள் மற்றும் 71 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். அதில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. அவர் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 67 வயதான குட்டி ஹாசன். கொரோனா தொடர்பான இறப்பு எண்ணிக்கை மாநிலம் முழுவதும் 68 ஆக உள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 1,47,132 பேர், வீடு அல்லது முகாம்களில் தனிமைப்படுத்தலில் 1,37,075 பேர் மற்றும் மருத்துவமனைகளில் 10,057 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1,475 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 23,924 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தற்போது வரை, மொத்தம் 7,33,413 மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன, அவற்றில் 7,037 மாதிரிகளின் முடிவுகள் காத்திருக்கின்றன.

19 புதிய ஹாட்ஸ்பாட்கள் உள்ளன மற்றும் 13 இடங்கள் விலக்கப்பட்டன. கேரளாவில் இப்போது 492 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.