தேசிய செய்திகள்

ரபேல் போர் விமானங்கள் எத்தகைய சவாலையும் முறியடிக்கும் திறன் வாய்ந்தவை: அமித்ஷா + "||" + World-class fighter jets will prove to be game-changer: Amit Shah after Rafale landing in Ambala

ரபேல் போர் விமானங்கள் எத்தகைய சவாலையும் முறியடிக்கும் திறன் வாய்ந்தவை: அமித்ஷா

ரபேல் போர் விமானங்கள் எத்தகைய சவாலையும் முறியடிக்கும் திறன் வாய்ந்தவை: அமித்ஷா
ரபேல் போர் விமானங்கள் எத்தகைய சவாலையும் முறியடிக்கும் திறன் வாய்ந்தவை என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
 
பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் விமானங்களில், முதல் கட்டமாக 5 விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்தன. அரியானா மாநிலம் அம்பாலா விமான படை தளத்தில் ரபேல் விமானங்கள் கம்பீரமாக தரையிறங்கின.

இந்திய விமானப்படை தளத்தில் ரபேல் விமானம் வந்திறங்கிய பின் உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ ரபேல் போர் விமானம் வந்திறங்கிய தினம்  நமது வலுவான இந்திய விமானப்படைக்கு வரலாற்று சிறப்புமிக்க தினமாகும். இந்தியாவிற்கு பெருமிதம் அளிக்கக் கூடிய தருணம் இது.

'அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இந்த விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டிருப்பது , இந்தியாவை வலிமைமிக்க மற்றும் பாதுகாப்பான நாடாக மாற்ற வேண்டுமென்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டிற்கு  சாட்சியமாக உள்ளது.  இந்திய ராணுவத்தின் திறனை அதிகரிக்க மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. ரபேல் விமானங்கள் வானில் ஏற்படக்கூடிய எத்தகைய சவாலையும் முறியடிக்கும் திறன்வாய்ந்த உலகின் சக்திமிக்க சாதனங்கள் ஆகும்” என்று பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் விமானம் விபத்துக்குள்ளான செய்தியை அறிந்து மனவேதனை அடைந்தேன் - அமித்ஷா
கேரளாவில் விமான விபத்து செய்தி அறிந்து மன வருத்தம் அடைந்துள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார்.
2. நடுவானில் எரிபொருள் நிரப்பிய ரபேல் போர் விமானங்கள் !
பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன 5 ரபேல் போர் விமானங்கள், நேற்று பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன.
3. 10 ஆயிரம்படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள டெல்லி தற்காலிக ஆஸ்பத்திரியில் அமித்ஷா ஆய்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் மராட்டிய மாநிலத்துக்கு அடுத்தபடியாக தலைநகர் டெல்லி 2வது இடத்தில் உள்ளது.
4. ராகுல் காந்தியை கடுமையாக சாடும் ராணுவ வீரரின் தந்தை - டுவிட்டரில் பகிர்ந்த அமித்ஷா
லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்களுடனான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
5. கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு தலைவணங்குகிறேன் - அமித்ஷா
கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு தலைவணங்குகிறேன் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.