சினிமா செய்திகள்

பாகுபலி இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா + "||" + My family members and I developed a slight fever few days ago. It subsided by itself but we got tested nevertheless. The result has shown a mild COVID positive today rajamouli ss

பாகுபலி இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா

பாகுபலி இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா
பாகுபலி இயக்குநரான ராஜமவுலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,

இந்திய அளவில் கொரோனா அச்சுறுத்தல் என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யா குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமவுலிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையி  ‘பாகுபலி’ படம் மூலம் உலக அளவில் கவனம் பெற்ற இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;

சில தினங்களுக்கு முன்பு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அது தானாகவே சரியாகிவிட்டாலும், நாங்கள் பரிசோதனை செய்து கொண்டோம். இன்று பரிசோதனை முடிவில்  கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் எங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நன்றாக உள்ளோம். ஆனால், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம்.

நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும் , பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

ராஜமவுலிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து, திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவர்  நலம்பெற வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.