தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது: இன்று மேலும் 9,,211 பேருக்கு தொற்று உறுதி + "||" + Maharashtra’s Covid-19 tally crosses 4 lakh mark with 9,211 new cases

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது: இன்று மேலும் 9,,211 பேருக்கு தொற்று உறுதி

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது: இன்று மேலும் 9,,211 பேருக்கு தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது. மாநிலத்தில் இன்று மேலும் 9,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று 9,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,00,651 ஆக அதிகரித்துள்ளது.


இன்று 298 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,463 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாநிலம் முழுவதும் 7,478 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,39,755 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,46,129 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து: பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
மராட்டிய மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
2. மராட்டியம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலி ; ஜனாதிபதி - பிரதமர் இரங்கல்
மராட்டிய மாநிலம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் பலியானார்கள். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. டெல்லியில் இன்று மேலும் 3,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 3,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கர்நாடகாவில் ஒரேநாளில் அதிக அளவாக 9,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் ஒரேநாளில் அதிக அளவாக 9,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் இன்று மேலும் 15,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்தது
மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 15,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.