தேசிய செய்திகள்

அயோத்தியில் மசூதி கட்ட அறக்கட்டளை: சன்னி வக்பு வாரியம் அமைத்தது + "||" + Mosque Building Foundation in Ayodhya: Established by the Sunny Waqf Board

அயோத்தியில் மசூதி கட்ட அறக்கட்டளை: சன்னி வக்பு வாரியம் அமைத்தது

அயோத்தியில் மசூதி கட்ட அறக்கட்டளை: சன்னி வக்பு வாரியம் அமைத்தது
அயோத்தியில் மசூதி கட்ட அறக்கட்டளை ஒன்றை சன்னி வக்பு வாரியம் அமைத்தது.
லக்னோ, 

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் முக்கியமான இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்கி தருமாறு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, அயோத்தியில் தானிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கிக் கொடுத்தது.

அந்த இடத்தில் மசூதி கட்டும் பணியை மேற்பார்வையிட சன்னி வக்பு வாரியம் ஒரு அறக்கட்டளையை அமைத்துள்ளது. ‘இந்தோ-இஸ்லாமிய கலாசார பவுண்டேசன்’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக வாரியத்தின் தலைவர் சுபர் அகமது பரூக்கி நேற்று அறிவித்தார்.

அவர் அறக்கட்டளையின் தலைவராகவும், தலைமை அறங்காவலராகவும் செயல்படுவார். 15 உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். மசூதியுடன் இந்தோ-இஸ்லாமிய ஆராய்ச்சி மையம், நூலகம், ஆஸ்பத்திரி ஆகியவையும் கட்டப்பட உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தியில் தங்கும் விடுதி கட்ட கர்நாடக அரசு முடிவு - 2 ஏக்கர் நிலம் ஒதுக்க உ.பி. முதல்-மந்திரிக்கு எடியூரப்பா கடிதம்
அயோத்தியில் தங்கும் விடுதி கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. விடுதி கட்ட 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி தரும்படி உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு, எடியூரப்பா கடிதம் எழுதி உள்ளார்.
2. நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
ராமர் கோவில் கட்டப்படுவதன் மூலம் நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
3. அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை தொடங்கியது - பிரதமர் மோடி பங்கேற்பு
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்று வருகிறது.
4. விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி:பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு யோகி ஆதித்யநாத், உமா பாரதி வருகை
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் இடத்திற்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
5. ராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் சிவசேனா நம்பிக்கை
ராமரின் அருளால் கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் என சிவசேனா கூறியுள்ளது.