மாநில செய்திகள்

சென்னை போலீசில் கொரோனா தொற்று குறைகிறது - குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு + "||" + Corona infection is declining in Chennai police Increase in the number of healers

சென்னை போலீசில் கொரோனா தொற்று குறைகிறது - குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை போலீசில் கொரோனா தொற்று குறைகிறது - குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை போலீசில் கொரோனா தொற்று குறைந்து குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே  செல்கிறது. கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும், கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களும் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை போலீஸ்துறையில் ஆரம்பத்தில் தினசரி 50-க்கும் மேற்பட்ட போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது அந்த தொற்று பாதிப்பு படிபடியாக குறைந்து வருகிறது. நேற்று 8 போலீசார் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னை போலீசில் 1,678 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் தொற்று பாதிப்பை விட குணம் அடையும் போலீசார் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று 34 போலீசார் குணம் அடைந்தனர். இதுவரை சென்னை போலீசில் 1,678 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியதில் 1,279 பேர் குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மேலும் 1,957- பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு காரணமாக 27-பேர் உயிரிழந்துள்ளனர்.
2. புதுச்சேரியில் திரையரங்குகள் மற்றும் மது பார்களை திறக்க அனுமதி
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
3. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை நெருங்குகிறது
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,947- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் இன்று 20,772-பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று 20,772-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மேற்கு வங்காளத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
மேற்கு வங்காளத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.