மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு + "||" + Increasing corona exposure in districts in Tamil Nadu

தமிழகத்தில் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே வருகிறது. முதலில் சென்னையில் மட்டும் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது.  இதையடுத்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோன பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு உறுதியான மாவட்டங்கள் பின்வருமாறு:-

* மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 10,884 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 7,882 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 231 பேர் உயிரிழந்துள்ளனர்.

* வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 199 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 5,757 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் 4,683 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வேலூரில் 1023 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 

* தேனி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,722 ஆக அதிகரித்துள்ளது. குணம் அடைந்தோர் எண்ணிக்கை 2,470 ஆக உள்ளது. மாவட்டத்தில் 1945 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

கன்னியாகுமரியில் மேலும் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,601 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் பேட்டி
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தலைமை செயலாளர் சண்முகம் பேட்டி அளித்தார்.
2. தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தமிழக சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. "தமிழகத்தில் விரைவில் நகரும் ரேஷன் கடைகள்" - அமைச்சர் செல்லூர் ராஜு
தமிழகத்தில் விரைவில் நகரம் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார்.