மாநில செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + 122 more affected by corona in Pondicherry

புதுச்சேரியில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரியில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  

இந்நிலையில் இன்று புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 122பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,293 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் புதுச்சேரியில் 114 பேரும் காரைக்காலில் 8 பேர் என புதிதாக 122 பேருக்கு இன்று தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,953 ஆக உள்ளது. மேலும் 1,292 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்து உள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் வேகமாக உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு - ஒரேநாளில் புதிதாக 178 பேருக்கு தொற்று
புதுச்சேரியில் புதிதாக 178 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது.
2. புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் - மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்
புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. புதுச்சேரியில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
புதுச்சேரியில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
4. புதுச்சேரியில் குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து
புதுச்சேரியில் குற்றப்பின்னணி அரசியலை ஒழிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது.
5. புதுச்சேரி அருகே எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு
புதுச்சேரி அருகே வில்லியனூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவித்துண்டு அணிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.