மாநில செய்திகள்

கன்னியாகுமரி குழித்துறையில் அண்ணா சிலை அவமதிப்பு: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் + "||" + Insult to Anna statue in Kanyakumari: DMK Chairman M.K. Stalin condemnation

கன்னியாகுமரி குழித்துறையில் அண்ணா சிலை அவமதிப்பு: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

கன்னியாகுமரி குழித்துறையில் அண்ணா சிலை அவமதிப்பு: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம்
கன்னியாகுமரி குழித்துறையில் அண்ணா சிலை அவமதிப்புக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,

கன்னியாகுமரி, குழித்துறை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டியும், காவிக் கொடியையும் கட்டியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டி குப்பை வீசி அவமதிப்புக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அண்ணா சிலையை அவமதித்த குற்றவாளிகளை கைது செய்யவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள தனித்தன்மை இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள். தரம் தாழ்ந்த செயல்களால் அவர்களின் எண்ணம் தரை மட்டத்திற்கும் கீழே போகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.