உலக செய்திகள்

தெய்வ நிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொலை + "||" + Man shot dead for 'blasphemy' in Pakistan courtroom

தெய்வ நிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொலை

தெய்வ நிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவர் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பெசாவர்

பாகிஸ்தானில் கடந்த 2018ம் ஆண்டு தஹிர் அஹ்மத் நசீருக்கு எதிராக இளைஞர் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதாவது, தஹிர் தன்னை முகமது நபி என்று கூறி வந்ததால் தெய்வநிந்தனை வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான விசாரணை நேற்று பெசாவர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போதே தஹிர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுத்தள்ளிய நபர், தஹிரை இஸ்லாத்தின் எதிரி என கோபமாக கத்திக் கொண்டே கொன்றுள்ளார்.

அவரது பெயர் காலித் என தெரியவந்துள்ளது, அந்த இடத்திலேயே கைதும் செய்யப்பட்டார். குறித்த நபர் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியை கொண்டு வந்தது எப்படி என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2. பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை இந்தியா நிராகரித்தது; அபத்தமானது என கண்டனம்
பாகிஸ்தானின் புதிய வரைபடத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.
3. பாகிஸ்தானின் பிரபல டிவி ஹேக் செய்யப்பட்டு இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்
பாகிஸ்தானின் பிரபல செய்தித் தொலைக்காட்சி திடீரென சில நிமிடங்களுக்கு ஹேக் செய்யப்பட்டு, இந்திய தேசியக்கொடி திரையில் தோன்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்தியா தக்க பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
5. பாகிஸ்தான் - கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,74,289 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,74,289- ஆக உயர்ந்துள்ளது.