மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் + "||" + In the next 48 hours in Tamil Nadu Chance of rain in the northern coastal districts Chennai Meteorological Center

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பசலனம், பருவகாற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

மேலும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சின்கோனா (கோவை) - 8 செ.மீ., சித்தார் - 6 செ.மீ., தேவலா, சோலையாரில் தலா 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அந்தமான், மன்னார் வளைகுடா, கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசும். பலத்த காற்று வீசும் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில், 18 சதவீதம் பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
2. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது
தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையைவிட கோவை மற்றும் விருதுநகரில் அதிகம் பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
3. தமிழகத்தில் பெய்து வரும் மழை: உயர்ந்து வரும் அணைகளின் நீர்மட்டம்
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
4. தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
5. ஆகஸ்ட் 7 ந்தேதி : தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.