மாவட்ட செய்திகள்

அண்ணா சிலை மீது மர்மநபர்கள் அவமதிப்பு: துணை முதலமைச்சர் கண்டனம் + "||" + Mysteries insult on Anna statue

அண்ணா சிலை மீது மர்மநபர்கள் அவமதிப்பு: துணை முதலமைச்சர் கண்டனம்

அண்ணா சிலை மீது மர்மநபர்கள் அவமதிப்பு: துணை முதலமைச்சர் கண்டனம்
கன்னியாகுமரி குழித்துறை சந்திப்பில் அண்ணா சிலை அவமதிக்கப்பட்ட செயலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை மர்மநபர்கள் அவமதிப்பு செய்தும் பீடத்தில் காவிக் கொடியும் கட்டிச் சென்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.


பொதுவாழ்வில் ஈடுபட்ட மற்றும் சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை விரைவில் எடுக்கும் என பதிவிட்டுள்ளார்.