தேசிய செய்திகள்

டெல்லியில் டீசல் மீதான வாட் வரி குறைப்பு - அரவிந்த் கெஜ்ரிவால் + "||" + VAT Cut To 16.5% In Delhi, Diesel To Be Cheaper By Over Rs 8: Arvind Kejriwal

டெல்லியில் டீசல் மீதான வாட் வரி குறைப்பு - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் டீசல் மீதான வாட் வரி குறைப்பு -  அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30%ல் இருந்து 16.75% ஆக குறைத்து அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி,

பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருள் மீது மாநில அரசு வாட் வரி விதிக்கிறது. அந்த வாட் வரி விதிப்பு டெல்லியில் 30 சதவீதம் என்ற அளவுக்கு இருந்தது. இந்நிலையில்  டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30%ல் இருந்து 16.75% ஆக குறைத்து அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.


டெல்லியில் வாட் வரி கிட்டத்தட்ட பாதியாக குறைக்கப்பட்டு விட்டதால், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் 36 காசுகள் என்ற அளவுக்கு குறைந்து விடும். 82 ரூபாய் என்ற அளவுக்கு ஒரு லிட்டர் டீசல் டெல்லியில் விற்பனையாகியது. அது இனிமேல், 73 ரூபாய் 64 காசுகளாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று பிற மாநிலங்களும் வாட் வரி விதிப்பை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிறமாநில மக்களிடையே எழுந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை - அரவிந்த் கெஜ்ரிவால்
கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. டெல்லியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: யாரும் அச்சப்படத் தேவையில்லை - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
3. சிக்கிம் விவகாரம்: டெல்லி அரசு சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரம்; திரும்ப பெறப்பட்டது - அரவிந்த் கெஜ்ரிவால்
சிக்கிம் தனி நாடு என்று டெல்லி அரசு சா்ரபில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
4. டெல்லியில் கொரோனா பாதித்தவர்களில் 75 % பேருக்கு அறிகுறிகள் இல்லை - முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனா பாதித்தவர்களில் 75 % பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
5. பிளாஸ்மா தெரபி சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
பிளாஸ்மா தெரபி சிகிச்சை நல்ல பலன் அளிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.