மாநில செய்திகள்

ஆன் லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது - பள்ளிக்கல்வித்துறை + "||" + Published guidelines for online classes

ஆன் லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது - பள்ளிக்கல்வித்துறை

ஆன் லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது - பள்ளிக்கல்வித்துறை
ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தனியார் தொலைகாட்சிகள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,

ஆன் லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில்,

* ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தனியார் தொலைகாட்சிகள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும்.

* தொலைக்காட்சிகள் மூலமாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


* முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி,ஆப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள்   நடத்தலாம்.

* ஒவ்வொரு வகுப்புக்கும் இடையே 10 முதல் 15 நிமிடங்கள் இடைவேளை இருக்க வேண்டும்.

* எல்.கே.ஜி,யு.கே.ஜி வகுப்பு குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தக்கூடாது.

* 1-8 வகுப்பு வரை 1.30 மணி நேரம், 9-12 ஆம் வகுப்பு 3 மணி நேரம் மட்டுமே வகுப்பு   நடத்தலாம்.

* ஒவ்வொரு வகுப்பும் 30 முதல் 45 நிமிடங்கள் தான் இருக்க வேண்டும்.

* 9ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு நாளுக்கு  அதிகபட்சம் 3 மணி நேரம்தான் இணையவழி வகுப்பு நடத்த வேண்டும்.

* ஒவ்வொரு ஆசிரியரும் 6 வகுப்புகளை மட்டுமே எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3 வது வாரத்தில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன்
10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3 வது வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
2. 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் -அமைச்சர் செங்கோட்டையன்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.
3. பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.70 கோடி வழங்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.70 கோடி வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.