உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது அமெரிக்காவின் நாசா விண்கலம் + "||" + Nasa Mars 2020 launch: Perseverance rover set for lift-off

செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது அமெரிக்காவின் நாசா விண்கலம்

செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது அமெரிக்காவின் நாசா விண்கலம்
செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்காவின் நாசா விண்கலம் ரோவர் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலம் ஏவப்பட்டது.

ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் அமெரிக்காவின் நாசா விண்கலம் விண்ணில் பாய்ந்தது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்டுள்ள ரோவர் விண்கலத்திற்கு 'பெர்சிசவரன்ஸ்' என்று நாசா, பெயரிட்டுள்ளது.


செவ்வாய் கிரகத்தை பிப்ரவரி மாதம் அமெரிக்க விண்கலம் சென்றடையும் என தகவல் தெரிவிக்கின்றது.

இந்த பெர்சிசவரன்ஸ்' விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் வரை தங்கி ஆய்வுகளில் ஈடுபடும். செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் என்பது பூமியைப் பொறுத்தவரை 687 நாட்களாகும்.

இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் பழைமையான தன்மை குறித்தும், செவ்வாயில் மனிதன் வாழ்வதன் சாத்தியக்கூறுகள் பற்றியும் தரவுகளை சேகரிப்பதோடு மட்டும் அல்லாமல், அங்கிருந்து, பாறை மற்றும் மண் ஆகியவற்றின் மாதிரிகளையும் கொண்டுவரும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இது மனிதகுலத்தின் விண்வெளி ஆய்வு முயற்சிகளுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு விண்வெளி பயணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.