தேசிய செய்திகள்

ஆந்திராவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்: மயிரிழையில் உயிர் தப்பிய 2 பேர் + "||" + Andhra Pradesh A car with 2 passengers inside gets washed away in Anantapur while crossing a rivulet

ஆந்திராவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்: மயிரிழையில் உயிர் தப்பிய 2 பேர்

ஆந்திராவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்: மயிரிழையில் உயிர் தப்பிய 2 பேர்
ஆந்திராவில் ஆற்று வெள்ளத்தில ஒரு கார் அடித்துச்செல்லப்பட்டது. காரில் இருந்த இருவரை உள்ளூர் மக்கள் பத்திரமாக காப்பாற்றினார்.
ஐதராபாத்,

கர்நாடகா முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் கனமழை பெய்தது. கிருஷ்ணா நதி மற்றும் அதன் துணை நதிகளான பீமா, கட்டபிரபா, மலபிரபா, மற்றும் துங்கபத்ரா ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


இந்நிலையில் ஆந்திராவின் கடப்பாவிலிருந்து கர்நாடகாவின் பிஜாப்பூர் நோக்கிச் சென்ற காரில் இன்று இரண்டு பேர் பயணம் செய்தனர் . அவர்கள் செல்லும் வழியில் அனந்தபூர் மாவட்டம் ராஜபுரம் அருகே ஒரு கால்வாயில் வெள்ளம் பாய்ந்தோடியது. பாலத்திற்கு மேல் வெள்ளம் வேகமாக சென்று கொண்டிருந்தது. இன்று காலை 8.40 மணி அளவில் கூட்டி குண்டல் இடையே அருகே அரசு பேருந்து ஒன்று சென்றது. அப்போது கால்வாய் வெள்ளத்தில் பேருந்து வேகமாக கடந்து சென்று விட்டது.

அதனை தொடர்ந்து காரும் பின் தொடர்ந்து சென்றது. காரில் ராகேஷ் மற்றும் யூசுப் என்ற இரண்டு பேர் பயணம் செய்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு முன்பு வந்த பேருந்து வெள்ளத்தை கடந்துவிட்டது. காரால் வெள்ளத்தை எதிர்த்து வர செல்ல முடியவில்லை. வெள்ளத்தில் சிக்கி வர முடியாமல் தத்தளித்தது. கார் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. காரில் இருந்த ராகேஷ் மற்றும் யூசப் உள்ளிட்ட 2 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர்.

ஆனால் நல்ல வேளையாக ஆற்றில் நீர் மட்டம் ஆழமில்லாமல் இருந்ததால் உள்ளூர் மக்கள் உதவியுடன் அவர்கள் இருவரும் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர்.  காட்டாற்றில் போராடி இளைஞர்களை மீட்டதால் அந்த கிராம இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதனிடையே கார் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதை சுற்றியிருந்த பலரும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியா சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.