மாநில செய்திகள்

பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவலுக்கு குஷ்பு மறுப்பு + "||" + My stand on #NEP2020 differs from my party n I apologize to @RahulGandhi ji for that

பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவலுக்கு குஷ்பு மறுப்பு

பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவலுக்கு குஷ்பு மறுப்பு
பாஜகவில் இணைய போவதாக வெளியான தகவலுக்கு குஷ்பு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதை வரவேற்பதாக தனது டுவிட்டரில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்திருந்தார்.

புதிய கல்விக்கொள்கையின் பல அம்சங்களை காங்கிரஸ் விமர்சித்துவந்த நிலையில், குஷ்புவின் திடீர் கருத்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.


இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்து மீண்டும் குஷ்பூ டுவிட் செய்துள்ளார். அதில், புதிய கல்விக்கொள்கையில் தனது நிலைப்பாடு, கட்சியிலிருந்து வேறுபடுகிறது என்றும், அதற்காக நான் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

ஆனால் நான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன் என தெரிவித்துள்ளார்.

தான் பாஜகவுக்கு செல்லவில்லை என்றும், என் கருத்து கட்சியிலிருந்து வேறுபட்டிருக்கலாம் ஆனால், நான் சொந்த சிந்தனை கொண்ட ஒரு தனிநபர் என தெரிவித்துள்ள அவர், புதிய கல்விக்கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருப்பினும், மாற்றத்தை நேர்மறையுடன் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி என்பது நாட்டின் எதிர்காலத்திற்காக உழைப்பதாகும், அரசியல் என்பது சத்தம் போடுவது மட்டுமல்ல, அது ஒன்றிணைந்து செயல்படுவதும் எனவும் இதனை பா.ஜ.க புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.