தேசிய செய்திகள்

அயோத்தி கோவில் அடிக்கல் விழா ஏற்பாடு பணிகளில் ஈடுபட்டிருந்த தலைமை குரு உள்ளிட்ட 14 போலீசாருக்கு கொரோனா + "||" + Priest, 14 Cops Involved In Ayodhya Ram Temple Event Test Covid +ve

அயோத்தி கோவில் அடிக்கல் விழா ஏற்பாடு பணிகளில் ஈடுபட்டிருந்த தலைமை குரு உள்ளிட்ட 14 போலீசாருக்கு கொரோனா

அயோத்தி கோவில் அடிக்கல் விழா ஏற்பாடு பணிகளில் ஈடுபட்டிருந்த தலைமை குரு உள்ளிட்ட 14 போலீசாருக்கு கொரோனா
அயோத்தி கோவில் அடிக்கல் விழா ஏற்பாடு பணிகளில் ஈடுபட்டிருந்த தலைமை குரு உள்ளிட்ட 14 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
லக்னோ,

அயோத்தியில், வருகிற 5-ந் தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. அதில், பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பா.ஜனதா மூத்த தலைவர்கள் மற்றும் பல மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்கிறார்கள்.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். விழாவையொட்டி, அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது கோவிலின் தலைமை குருவின் உதவியாளரான பிரதீப் தாஸ் மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 14 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதீப் தாஸ் தினமும் அங்கு பூஜைகள் மேற்கொள்பவர் ஆவார்.

இருப்பினும் அயோத்தி கோவில் அடிக்கல் நாட்டு விழா திட்டமிட்டப்படி நடக்கும் என கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவிற்கு பிரதமர்  மோடி வருகையையொட்டி  கோவில் தளத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய அளவிலான சிசிடிவி திரைகள், வண்ண ஓவியங்கள் உள்ளிட்டவையால் அயோத்தி சாலைகள் முழுவதும் அலங்கரிங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி ராமா ஜென்ம பூமியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல்நாட்டப்படுவதையொட்டி அங்கு தூய்மைப்
பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.இதில் 300 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

உத்திர பிரதேசத்தில் தற்போது வரை 29,997 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அயோத்திலிருந்து மட்டும் 375 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.