மாநில செய்திகள்

பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவு + "||" + Textbooks from August 3rd Order to deliver Education

பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவு

பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவு
அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.


மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை 40% வசூலித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், விலையில்லா புத்தகப்பை வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில்,

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெருள்களை வழங்க உத்தரவிடப்படுகிறது.

 சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 1 மணி நேரத்திற்கு 20 மாணவர்களுக்கே வழங்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.