தேசிய செய்திகள்

கல்வானில் வீர மரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படுகிறது! + "||" + Ladakh Standoff: Names of 20 Army Personnel Killed in Galwan Valley to be Inscribed on National War Memorial

கல்வானில் வீர மரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படுகிறது!

கல்வானில் வீர மரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படுகிறது!
கல்வானில் சீனர்களுடன் நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் டெல்லி தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்திய சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் ஜூன் 15 ந்தேதி இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்தது.  இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.  இந்த மோதலில் நம் வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் சீன தரப்பிலும் 43 பேர் வரை உயிரிழந்தனர்.


இந்திய தரப்பில் பீகார் ராணுவ அதிகாரி பி சந்தோஷ் பாபுவும் வீரமரணம் அடைந்தார். கல்வானில் நடந்த மோதலின் போது சீனர்கள் கற்கள், ஆணிகள் பதிக்கப்பட்ட ராடுகளை கொண்டு நம் வீரர்களை தாக்கினர்.

இந்நிலையில் நம் நாட்டின் எல்லையை காக்கும் பொருட்டு நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களின் பெயர்களும் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என்றும் இப்பணி சில மாதங்களில் நிறைவடையும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.