தேசிய செய்திகள்

பீகாரில் இடி, மின்னலுக்கு 8 பேர் பலி; குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு + "||" + 8 killed in Bihar thunder, lightning; Compensation of Rs 4 lakh per family

பீகாரில் இடி, மின்னலுக்கு 8 பேர் பலி; குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு

பீகாரில் இடி, மின்னலுக்கு 8 பேர் பலி; குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு
பீகாரில் இடி, மின்னலுக்கு பலியான 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல் மந்திரி அறிவித்து உள்ளார்.
பாட்னா,

நாட்டின் வடபகுதிகளில் பெய்து வரும் கனமழையால் டெல்லி, அசாம், பீகார் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இவற்றில், பீகாரில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், பலர் தங்கள் வீடுகளையும், கால்நடைகளையும் இழந்தும் உள்ளனர்.  அவர்களில் ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  இதுதவிர பீகாரில் மின்னல் தாக்கி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இதுபற்றி பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் கூறும்பொழுது, பீகாரில் 8 பேர் இடி, மின்னல் தாக்கியதில் இன்று உயிரிழந்து உள்ளனர்.  இவர்களில் தலா 3 பேர் ஷேக்புரா மற்றும் ஜமுய் பகுதிகள், தலா ஒருவர் சிவான் மற்றும் பெகுசராய் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அவர் அறிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியன் 2 படப்பிடிப்பில் பலியான 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் இழப்பீடு வழங்கியுள்ளனர்.