தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் பூசாரிக்கு கொரோனா: 16 போலீசாருக்கும் தொற்று உறுதி + "||" + Corona to Ayodhya Ram temple priest: 16 police confirmed infection

அயோத்தி ராமர் கோவில் பூசாரிக்கு கொரோனா: 16 போலீசாருக்கும் தொற்று உறுதி

அயோத்தி ராமர் கோவில் பூசாரிக்கு கொரோனா: 16 போலீசாருக்கும் தொற்று உறுதி
அயோத்தி ராமர் கோவில் பூசாரி உள்பட 16 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி, 

அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் பூசாரி பிரதீப் தாஸ் என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. ராமர் கோவிலில் தினசரி பூஜைகளை செய்யும் முக்கிய 4 பூசாரிகளில் இவரும் ஒருவர். இதனையடுத்து பூசாரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதாரத்துறையினர் தேடி வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்குமுன்பு பத்திரிகையாளர்களுக்கு தாஸ் பேட்டி அளித்தார். இதனால் தங்களுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ? என்ற அச்சத்தில் பத்திரிகையாளர்கள் உள்ளனர்.

இதுதவிர அயோத்தியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் 16 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களுக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு சிகிச்சை: மும்பையில் புதிதாக 1,125 பேருக்கு கொரோனா
மும்பையில் புதிதாக 1,125 பேருக்கும், தாராவியில் ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 லட்சத்தை தாண்டியது
பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 28 லட்சத்தை தாண்டியுள்ளது.
3. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
4. ஊழியருக்கு கொரோனா தொற்று குன்றத்தூர் பத்திரப்பதிவு அலுவலகம் மூடல்
ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதால்குன்றத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை அதிகாரிகள் இழுத்து மூடினர்.
5. அனகாபுத்தூர் நகராட்சி கமிஷனருக்கு கொரோனா
அனகாபுத்தூர் நகராட்சி கமிஷனருக்கு கொரோனா தொற்று உறுதியானது.