உலக செய்திகள்

தொடர்ந்து 3 வது நாளாக சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று + "||" + China reports more than 100 new Covid-19 cases for third day in a row

தொடர்ந்து 3 வது நாளாக சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

தொடர்ந்து 3 வது நாளாக சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
சீனா தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 100 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளது.
பீஜிங்

உலகம் முழுவதும் கொரோனதொற்றுக்கு  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.75 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,75,757 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்து உள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 1,74,53,103 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,921,667 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 66,467 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 1464 பேர் உயிரிழந்தை தொடர்ந்து அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1.44 லட்சத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் மீண்டும் 68 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 46.34 லட்சத்தை தாண்டியது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 22.83 லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் நேற்று 127 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் வெள்ளிக்கிழமை காலை தெரிவித்துள்ளது. சீனா தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 100 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுநோய்களைப் பதிவு செய்துள்ளது.

புதிய பாதிப்புகள்  123 உள்நாட்டில் பரவியது, 112 தொலைதூர மேற்கு பிராந்தியமான ஜின்ஜியாங்கிலும், மீதமுள்ளவை வடகிழக்கு மாகாணமான லியாவோனிங்கிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லையில் அசாதாரண சூழல் தொடர்கிறது: இந்திய விமானப்படை தளபதி
எல்லையில் அசாதாரண சூழல் தொடர்வதாக இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
2. 15 கோடி விரைவான கொரோனா சோதனை கருவிகள் விநியோகிக்கும் திட்டம் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க அரசு அடுத்த சில வாரங்களில் 15 கோடி விரைவான, கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளை விநியோகிக்கும் என்று அறிவித்து உள்ளார்.
3. இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100% அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமாவோர் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
4. நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவுகள்: புதிய சோதனைக்கருவிகள் விரைவில் அறிமுகம்
நிமிடங்களில் சோதனை முடிவுகளை கொடுக்கக்கூடிய கொரோனா சோதனைக்கருவிகள் விரைவில் உலகம் முழுவதும் கொண்டுவரப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
5. பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதிக்கு கொரோனா மருத்துவமனையில் அனுமதி
பா.ஜனதா மூத்த தலைவர் உமாபாரதி கொரோனா தொற்று காரணமாக ரிஷிகேசில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...