தேசிய செய்திகள்

கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய 150 கி.மீ. தூரம் காரை தானே ஓட்டிச்சென்ற முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே + "||" + To study the condition of the corona 150 km Drove the car himself in the distance The first-minister, Uddhav Thackeray

கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய 150 கி.மீ. தூரம் காரை தானே ஓட்டிச்சென்ற முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே

கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய 150 கி.மீ. தூரம் காரை தானே ஓட்டிச்சென்ற முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய 150 கி.மீ. தூரம் காரை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனியாக ஓட்டிச்சென்றார்.
மும்பை, 

மராட்டியம் கொரோனா வைரசின் பிடியில் சிக்கி தவிக்கும் நிலையில், தலைநகர் மும்பையில் இந்த வைரஸ் பரவல் சற்று தணிந்து உள்ளது. புனே, தானே மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. 

இந்தநிலையில், புனேயில் கொரோனா நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மும்பையில் உள்ள தனது மாதோஸ்ரீ இல்லத்தில் இருந்து புனேக்கு(சுமார் 150 கி.மீ.) தானே காரை ஓட்டிச் சென்றார். அவருடன் அவரது மகனும், மந்திரியுமான ஆதித்ய தாக்கரே உடன் சென்றார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே டிரைவரை தவிர்த்து அடிக்கடி தானே கார் ஓட்டுவது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் புனே சென்றடைந்த உத்தவ் தாக்கரே மாவட்ட கலெக்டர் மற்றும் மண்டல ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சசூன் மற்றும் நாயுடு அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புனே மாவட்டத்தில் இதுவரை 78 ஆயிரத்து 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 2 ஆயிரத்து 613 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மும்பை உலக கவனத்தை ஈர்த்துள்ளது - உத்தவ் தாக்கரே பெருமிதம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மும்பை உலக கவனத்தை ஈர்த்து உள்ளதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
2. கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் செய்வோருக்கு ரூ.2 ஆயிரம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மராட்டியத்தில் கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தானம் செய்வோருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.
3. சிவசேனா கூட்டணி அரசில் மந்திரிகள் அதிருப்தி? முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சரத்பவார் திடீர் சந்திப்பு
மந்திரிகள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்று திடீரென முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும், சரத்பவாரும் சந்தித்து பேசினார்கள்.
4. தானேயில், 1,024 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே திறந்து வைத்தார்
தானேயில் 1,024 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று திறந்து வைத்தார்.
5. 4 ஆயிரத்து 653 முகாம்களில் 4½ லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தகவல்
மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 653 முகாம்களில் 4½ லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.