தேசிய செய்திகள்

கொரோனாவை துல்லியமாக கண்டறியாத ஆன்டிஜன் பரிசோதனையை நிறுத்த வேண்டும் - முதல்-மந்திரிக்கு, பட்னாவிஸ் கடிதம் + "||" + Antigen testing that does not accurately detect corona should be discontinued The first-minister,Patnavis letter

கொரோனாவை துல்லியமாக கண்டறியாத ஆன்டிஜன் பரிசோதனையை நிறுத்த வேண்டும் - முதல்-மந்திரிக்கு, பட்னாவிஸ் கடிதம்

கொரோனாவை துல்லியமாக கண்டறியாத ஆன்டிஜன் பரிசோதனையை நிறுத்த வேண்டும் - முதல்-மந்திரிக்கு, பட்னாவிஸ் கடிதம்
கொரோனா தொற்றை துல்லியமாக கண்டறியாத அன்டிஜன் பரிசோதனையை நிறுத்த வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கடிதம் எழுதி உள்ளார்.
மும்பை,

கொரோனா பரிசோதனை ஆன்டிஜன் மற்றும் ஆர்.டி.-பி.சி.ஆர். முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் விரைவாக முடிவு கிடைக்கும் ஆன்டிஜன் பரிசோதனையால் துல்லியமான முடிவுகள் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஆன்டிஜன் கொரோனா பரிசோதனை முறையை நிறுத்த வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு, சட்டசபை எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை மும்பையில் உள்ள 2 ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட 65 சதவீத ஆன்டிஜன் சோதனை முடிவுகள் நோய் பாதிப்பு இல்லை என வந்து உள்ளது. ஆனால் அதே நபர்கள் ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை செய்த போது அவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே துல்லியமான முடிவுகள் கிடைக்க மாநில அரசு ஆன்டிஜன் சோதனைக்கு பதிலாக ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனைக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் மராட்டியத்தில் அதிக ஆர்.டி-பி.சி.ஆர். சோதனை செய்யும் திறன் உள்ளதை சுட்டி காட்டி உள்ளது. மாநில அரசு ஆய்வகங்களில் ஒரு நாளில் 35 ஆயிரத்து 900 மாதிரிகளை கொரோனா பரிசோதனை செய்ய முடியும். மும்பையில் மட்டும் 12 ஆயிரத்து 210 மாதிரிகளை பரிசோதனை செய்யும் திறன் உள்ளது.

ஆனால் மும்பையில் சராசரியாக ஒரு நாளில் 5 ஆயிரத்து 800 மாதிரிகள் சோதனை மட்டுமே செய்யப்படுகிறது. மாநில அரசுக்கு அதிக மாதிரிகளை சோதனை செய்யும் வசதி உள்ள போது, பொது மக்கள் ஏன் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு செல்லவும், பணம் கொடுத்து சோதனை செய்யவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்?. மாநில அரசு தினமும் மேற்கொள்ளும் ஆன்டிஜன், பி.டி.-பி.சி.ஆர். சோதனை விவரங்களை தனித்தனியாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.