மாநில செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் பெயர் மாற்றம்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு + "||" + Chennai Metro stations to be renamed: Chief Minister Palanisamy's announcement

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் பெயர் மாற்றம்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் பெயர் மாற்றம்: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்து முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,

இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படுவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இது தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது. 

இந்நிலையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்து முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பெயர் மாற்றம் செய்யப்பட்ட ரயில் நிலையங்கள் விவரம்,

* சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் ”அறிஞர் அண்ணா மெட்ரோ ரயில் நிலையம்” என பெயர் மாற்றம் செய்து முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

* சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் ”புரட்சி தலைவர் எம்ஜிஆர் மெட்ரோ நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

* கோயம்பேடு புறநகர் மெட்ரோ நிலையம் ”ஜெயலலிதா மெட்ரோ நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.