மாநில செய்திகள்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவர்கள் 94.38% , மாணவிகள் 97.49% தேர்ச்சி + "||" + 11th class general examination results released: 94.38% of students, 97.49% of students passed

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவர்கள் 94.38% , மாணவிகள் 97.49% தேர்ச்சி

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவர்கள் 94.38% , மாணவிகள் 97.49%  தேர்ச்சி
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வில் 96.04% மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் எழுதிய பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 96.04% மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1  தேர்வில் மாணவர்கள் 94.38% , மாணவிகள் 97.49%  தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கோவை மாவட்டம் 98.10 % பெற்று முதலிடத்தில் உள்ளது.  மேலும் அரசு பள்ளிகள் தேர்ச்சி 92.71 % விகிதமாக உள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 96.95 %. 

* மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 99.51 %

* பெண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 97.56 %

* ஆண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 91.77 %

* 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலை பள்ளிகள் -2,716

* மாணவர்களை விட 3.11 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி. 

மேலும் http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்

அதனை தொடர்ந்து கடந்த 27-ந்தேதி நடைபெற்ற பிளஸ்-2 மறுதேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் மறுதேர்வு எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 63 பேர் மட்டுமே என தகவல் வெளியாகியுள்ளது.