தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + India's COVID tally crosses 16 lakh mark with the highest single-day spike of 55,079 positive cases & 779 deaths in the last 24 hours.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 55,079  பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 55,079  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை  தாண்டி உள்ளது. மொத்தம் 16,38,871 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும்  779 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,747 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,57,806 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,45,318 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா, அமைதியை விரும்பும் நாடு: ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுதந்திர தின உரை
இந்தியா, அமைதியை விரும்பும் நாடு. ஆனால், எல்லையில் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டால் தக்க பதிலடி கொடுக்கும் திறன் கொண்டது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் கூறினார்.
2. இந்தியாவில் சாதனை அளவாக ஒரே நாளில் 8½ லட்சம் மாதிரிகள் பரிசோதனை - மீட்பு விகிதமும் உயர்வு
இந்தியாவில் சாதனை அளவாக ஒரே நாளில் 8½ லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. மேலும் மீட்பு விகிதமும் உயர்ந்துள்ளது.
3. இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 67 ஆயிரம் பேருக்கு தொற்று: பலி எண்ணிக்கையும் உயர்ந்தது
இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 67 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
4. இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையவில்லை - பிரதமர் மீது ராகுல் காந்தி சாடல்
இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையவில்லை என்று பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
5. இந்தியாவில் தனியார் ரெயில்களை இயக்க ’ஸ்டெர்லைட் பவர்’ உள்பட 23 நிறுவனங்கள் ஆர்வம்
இந்தியாவில் தனியார் ரெயில்களை இயக்க ஸ்டெர்லைட் பவர் உள்பட23 நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.