உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் பலி + "||" + Afghanistan: At least 17 killed in Eid car blast

ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 17 பேர் கொல்லபட்டனர்.
காபூல்

ஆப்கானிஸ்தானில் லோகர் மாகாணத்தில் கவர்னர் அலுவலகத்திற்கு அருகிலும், பக்ரீத் பண்டிகைக்கு ஏராளமானோர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த இடத்திலும் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது.

பக்ரீத் பண்டிகையின்போது தலிபான்கள் அறிவித்த போர்நிறுத்தத்தின் போது இந்த ச் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க தலிபான்கள் மறுத்துள்ளனர், அதே நேரத்தில் ஐ.எஸ் அமைப்பும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸாபிஹுல்லா முஜாஹித், இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி உள்ளார்.

பக்ரீத் பண்டிகை இரவில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தி நம் நாட்டு மக்களைக் கொன்றனர் என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் அரசு- தலீபான்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது
ஆப்கானிஸ்தானின் நீண்டகால போரை முடிவுக்கு கொண்டுவரும் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நேற்று தொடங்கியது
2. ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.
3. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு: துணை அதிபரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் - காயங்களுடன் உயிர் தப்பினார்
ஆப்கானிஸ்தானில் துணை அதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அவர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
4. ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உள்பட 37 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தான் போர்விமானங்கள் நடத்திய தாக்குதலில் முக்கிய தளபதிகள் உள்பட 37 தலிபான்கள் பலியானார்கள்.
5. உலகிற்கே ஆபத்தான 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்யும் பணியை தொடங்கிய ஆப்கானிஸ்தான்
உலகிற்கே ஆபத்தானவர்கள் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட 400 தலிபான் பயங்கரவாதிகளையும் விடுதலை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.