உலக செய்திகள்

பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதல்: உஷார் நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம் + "||" + Indiscriminate shelling by Pakistan in Kandahar kills 9 civilians, injures 50; Afghan forces plan retaliation

பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதல்: உஷார் நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதல்:  உஷார் நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம்
பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து ராணுவத்தை உஷார் நிலையில் இருக்க ஆப்கானிஸ்தான் உத்தரவிட்டு உள்ளது.
காந்தஹார்

ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் வியாழக்கிழமை “குடியிருப்புப் பகுதிகள்” மீது பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் குறைந்தது 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஆப்கானிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் யாசின் ஜியா, அடல் 205, செலாப் 201 மற்றும் தண்டர் 203 உள்ளிட்ட அனைத்து இராணுவப் படையினருக்கும் பாகிஸ்தான் படைகளுக்கு எதிராப  நடவடிக்கைகளுக்குத் தயாராகுங்கள் என்றும், துரண்ட் கோட்டில் நிறுத்தப்பட்டுள்ள ஆப்கானிய படையை  தயார்பபடுத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.

ஆப்கானிஸ்தான் விமானப்படை மற்றும் நாட்டின் சிறப்புப் படைகள் பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான  நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் இராணுவப் படைகள் பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனஆனால்  பாகிஸ்தானிய ராணுவம் தொடர்ந்து இந்த தாக்குதல்களை மறுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் 40,000 பயங்கரவாதிகள் இருப்பதை இம்ரான்கான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்- ஐநாவில் இந்தியா
பாகிஸ்தானில் 40,000 பயங்கரவாதிகள் இருப்பதை இம்ரான்கான் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார் என பயங்கரவாத எதிர்ப்பு பதிவு தொடர்பாக ஐ.நா. அமைப்பில் இந்தியா பாகிஸ்தானை குற்றம்சாட்டியது
2. இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, கதறி அழும் ராணுவத்தில் சேரும் இளம் சீன வீரர்கள்
இந்திய இராணுவத்தின் வலிமைக்கு பயந்து, ராணுவத்தில் சேரும் இளம் சீன வீரர்கள் எல்லைக்கு செல்லும் வழியில் கதறி அழும் வீடியோ வைரல் ஆகி உள்ளது. இதனை சீன மீடியா மறுத்து உள்ளது.
3. கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை - மத்திய இணை அமைச்சர்
கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை என்று மாநிலங்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்து உள்ளார்.
4. குல்பூஷண் ஜாதவ் வழக்கு : பாகிஸ்தான் அவசர சட்டம் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு
மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ் மேல்முறையீடு தொடர்பாக அவசர சட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் நீட்டித்துள்ளது.
5. பாகிஸ்தானில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐந்து மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.