மாநில செய்திகள்

பக்ரீத் பண்டிக்கையை அரசு வழிகாட்டுதல்படி கொண்டாடுங்கள் - அமைச்சர் நிலோபர்கபில் வேண்டுகோள் + "||" + Celebrate Bakreed as per government guidelines At the request of Minister Nilofar Kapil

பக்ரீத் பண்டிக்கையை அரசு வழிகாட்டுதல்படி கொண்டாடுங்கள் - அமைச்சர் நிலோபர்கபில் வேண்டுகோள்

பக்ரீத் பண்டிக்கையை அரசு வழிகாட்டுதல்படி கொண்டாடுங்கள் - அமைச்சர் நிலோபர்கபில் வேண்டுகோள்
பக்ரீத் பண்டிக்கையை அரசு வழிகாட்டுதல்படி கொண்டாடுங்கள் என்று அமைச்சர் நிலோபர்கபில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை வந்துள்ளது. இந்த கொடிய வைரஸ் பரவாமல் இருக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

நோய்த்தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடித்து ஆக வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். எனவே நாளை (சனிக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின் படி கிராமம், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் தங்களது வீடுகளிலேயே சமூக இடைவெளியை பின்பற்றி தொழுகை நடத்த வேண்டும்.

குர்பாணி அளிப்பதையும் அரசு வழிகாட்டுதலின்படி செயல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதனை எல்லாத் தரப்பு மக்களின் நன்மைக்காகத்தான் அரசு சொல்கிறது என நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி இந்த பக்ரீத் திருநாளை கொண்டாடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.