தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து - விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு + "||" + Intl Commercial Passenger Flights to Remain Suspended Till August 31, Says DGCA

ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து - விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு

ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து - விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு
ஆகஸ்ட் 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை  சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. 

மேலும் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், சரக்கு சேவை விமானங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.