தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 1,310 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Kerala reports 1,310 COVID-19 cases; 3 deaths takes toll to 73

கேரளாவில் மேலும் 1,310 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி

கேரளாவில் மேலும் 1,310 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் இன்று மேலும் 1,310 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரள சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 1,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,607 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். 

இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 48 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 54 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கும் உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 864 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 13,027 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 10,495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 22,279 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தற்போது வரை, மொத்தம் 7,76,268 மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன,

தற்போது மாநிலம் முழுவதும் 1,43,323 பேர், வீடு அல்லது முகாம்களில் தனிமைப்படுத்தலில் 1,33,151 பேர் மற்றும் மருத்துவமனைகளில் 10,172 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1,292 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு- இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று
கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,477 -பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் அதிகபட்ச அளவாக ஒரே நாளில் 6,324 பேருக்கு கொரோனா
கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 6,324 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3. கேரளாவில் இதுவரை இல்லாத உச்சம்; ஒரே நாளில் 5,376-பேருக்கு கொரோனா
கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. கேரளாவில் மேலும் 3,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி இன்று மேலும் 3,215 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
5. தமிழகம், கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 ஆயிரத்து 700 கோடி மோசடி; 2 பேர் சிக்கினர்
நிதி நிறுவனம் நடத்தி ரூ.4 ஆயிரத்து 700 கோடி மோசடி செய்த கோவையை சேர்ந்த 2 பேரை சேலம் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால், சேலம் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் மூடப்பட்டது.