தேசிய செய்திகள்

விஷ சாராயம் குடித்து 21 பேர் பலியான விவகாரம்; விசாரணைக்கு பஞ்சாப் முதல் மந்திரி உத்தரவு + "||" + 21 killed in poisoning Punjab Chief Minister orders inquiry

விஷ சாராயம் குடித்து 21 பேர் பலியான விவகாரம்; விசாரணைக்கு பஞ்சாப் முதல் மந்திரி உத்தரவு

விஷ சாராயம் குடித்து 21 பேர் பலியான விவகாரம்; விசாரணைக்கு பஞ்சாப் முதல் மந்திரி உத்தரவு
பஞ்சாபில் விஷ சாராயம் குடித்ததில் 21 பேர் பலியான சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முதல் மந்திரி உத்தரவிட்டு உள்ளார்.
சண்டிகர்,

பஞ்சாபில் கடந்த புதன்கிழமை இரவில் விஷ சாராயம் குடித்ததில் பலர் பலியான தகவல் வெளியானது.  இதில், அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன்தரன் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்து உள்ளனர்.

அவர்களில், அமிதர்சரசின் தர்சிக்கா பகுதிக்கு உட்பட்ட முச்சல் மற்றும் தங்ரா ஆகிய கிராமங்களை சேர்ந்த 5 பேர் பலியான தகவல் முதலில் வெளியானது.  பின்னர் நேற்று மாலை, அமிர்தசரசின் முச்சல் கிராமத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.  மற்றொருவர் மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார்.

இதன்பின்னர் முச்சல் கிராமத்தில் 2 பேரும், படாலாவில் 2 பேரும் விஷ சாராயம் குடித்த சம்பவத்தில் பலியாகி உள்ளனர்.

இதேபோன்று, படாலாவில் இன்று 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் அந்நகரில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.  4 பேர் டார்ன்தரன் நகரில் பலியாகி உள்ளனர்.

இதனால் விஷ சாராயம் குடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.  ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  தொடர்ந்து அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.  இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிங் உறுதியளித்து உள்ளார்.