தேசிய செய்திகள்

கர்நாடக மந்திரி பி.சி. பாட்டீலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Karnataka Minister P.C. Patil Corona exposure confirmed

கர்நாடக மந்திரி பி.சி. பாட்டீலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கர்நாடக மந்திரி பி.சி. பாட்டீலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கர்நாடகாவில் மந்திரி பி.சி. பாட்டீல் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.
பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  கர்நாடகாவில் 5,483 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டது.  இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,24,115 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் இன்று 84 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,314 ஆக உயர்ந்துள்ளது.  கர்நாடகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு ஆகஸ்டு 31ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடக மந்திரி பி.சி. பாட்டீல் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.  இதனை அவர் இன்று உறுதிப்படுத்தி உள்ளார்.  இதனை தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.  சமீபத்தில் கொப்பல் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட அவருடன் சென்ற 5 பணியாளர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்ய துணை பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ரஷ்ய துணை பிரதமர் யூரி ட்ருட்னெவ் கொரோனா வைரசால் பாதிப்படைந்து உள்ளார்.
2. உலகளவில் கொரோனா 6 வாரங்களில் இரட்டிப்பு
உலகளவில் கொரோனா பாதிப்பு, 6 வாரங்களில் இரட்டிப்பு ஆகி உள்ளது.
3. அமெரிக்காவில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 14% குறைவு; அதிபர் டிரம்ப் பேட்டி
அமெரிக்காவில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு 14% அளவிற்கு குறைந்துள்ளது என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
4. நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின் புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. இந்தியாவில் 4 நாட்களுக்கு பின் குறைந்த பாதிப்பு; கடந்த 24 மணிநேரத்தில் 53,601 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 871 பேர் பலியாகி உள்ளனர்.