மாநில செய்திகள்

முழு ஊரடங்கு நாட்களில் அரசு சார்பில் தலைவர்கள் சிலைக்கு மரியாதை செய்ய அனுமதி; புதிய அரசாணை வெளியீடு + "||" + Allowed leaders to pay homage to the statue on behalf of the state during the entire curfew; New Government Release

முழு ஊரடங்கு நாட்களில் அரசு சார்பில் தலைவர்கள் சிலைக்கு மரியாதை செய்ய அனுமதி; புதிய அரசாணை வெளியீடு

முழு ஊரடங்கு நாட்களில் அரசு சார்பில் தலைவர்கள் சிலைக்கு மரியாதை செய்ய அனுமதி; புதிய அரசாணை வெளியீடு
முழு ஊரடங்கு நாட்களில் அரசு சார்பில் தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்த அரசியல் கட்சியினருக்கு அனுமதி அளித்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் ஆகஸ்டு 31-ந் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தன்னிகரில்லா தலைவர்களையும், தமிழ் மொழி வளர்ச்சிக்காக உழைத்த அறிஞர் பெருமக்களை புகழவும், அவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சிகளை அரசு நடத்தி வருகிறது.

தற்போது கொரோனா மேலும் பரவாமல் இருக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் விதித்துள்ளது. இந்தநிலையில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாவட்ட கலெக்டர் மட்டுமே உரிய சமூக இடைவெளியைக் கடைபிடித்து மாலை அணிவிக்க அவ்வப்போது அனுமதி அளிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களிலும் தலைவர்களின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக தற்போது அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, அரசு அறிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து அமைச்சர்கள், நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டருடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதிக்கப்படுகிறது.

மரியாதை செய்யப்படும் தலைவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் (5 பேருக்கு மிகாமல்) அந்தந்த மாவட்டத்தைச் சார்ந்த பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் (5 பேருக்கு மிகாமல்) சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் முன் அனுமதி மற்றும் வாகனத்துக்கான அனுமதியைப் பெற்று உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து மாலை அணிவித்து மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டில் இருந்து பணியாற்ற ஜூலை 2021 வரை பேஸ்புக் நிறுவனம் அனுமதி; ஊக்கத்தொகை அறிவிப்பு
வீட்டில் இருந்து பணியாற்ற ஜூலை 2021 வரை பேஸ்புக் நிறுவனம் அனுமதி அளித்து அலுவலகம் அமைக்க ஊக்கத்தொகையும் அறிவித்து உள்ளது.
2. விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் - பிள்ளையார் வேடமணிந்து மனு அளித்த சிவசக்தி சேனா இயக்கத்தினர்
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று சிவசக்தி சேனா இந்து மக்கள் கட்சியின் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
3. டீ கடைகள், ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்; சென்னையில் கடைகளுக்கு இரவு 7 மணி வரை அனுமதி
சென்னையில் டீ கடைகள், ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம் என்றும் கடைகளுக்கு இரவு 7 மணி வரை அனுமதி வழங்கியும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
4. திட்டக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா கோவை ஆஸ்பத்திரியில் அனுமதி
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர், கோவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
5. கொரோனா பாதித்த நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆரத்யா மருத்துவமனையில் அனுமதி
கொரோனா பாதித்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.