மாநில செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. விடுதலை; ஐகோர்ட்டு தீர்ப்பு + "||" + In the case of sexual abuse of the girl, DMK Former MLA Release; HC judgment

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. விடுதலை; ஐகோர்ட்டு தீர்ப்பு

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. விடுதலை; ஐகோர்ட்டு தீர்ப்பு
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை விடுதலை செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
சென்னை,

பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் ராஜ்குமார். இவரது வீட்டில் வேலை பார்த்த கேரளாவை சேர்ந்த 15 வயது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தாள். அந்த சிறுமியை முன்னாள் எம்.எல்.ஏ. பாலியல் வன்கொடுமை செய்து கொன்று விட்டதாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு நீதிபதி சாந்தி, கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தீர்ப்பு வழங்கினார். அதில், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அவரது நண்பர் ஜெய்சங்கர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.42 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும், மற்றவர்களை விடுதலை செய்வதாகவும் கூறியிருந்தார்.

சிறப்பு கோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.சதீஷ்குமார், “ராஜ்குமார், ஜெய்சங்கர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை” என்று கூறி இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அபராதத்தையும் ரத்து செய்தார்.