மாநில செய்திகள்

தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சம்; ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்தையும் கடந்தது + "||" + Gold prices continue to peak; A sovereign crossed Rs.41,000

தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சம்; ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்தையும் கடந்தது

தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சம்; ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்தையும் கடந்தது
தங்கம் விலை குறையுமா? என்று பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில், நாளுக்குநாள் அது வரலாறு காணாத உச்சத்தை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது.
சென்னை,

தங்கம் விலை நேற்றும் அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது.  கடந்த மாதத்தில் 22-ந்தேதியில் இருந்து நேற்று வரையிலான 10 நாட்களில் மட்டும் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.38 ஆயிரம், ரூ.39 ஆயிரம், ரூ.40 ஆயிரம் என்ற நிலைகளை கடந்த நிலையில், நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரத்தையும் தாண்டி தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது.

நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.57-ம், பவுனுக்கு ரூ.456-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 150-க்கும், ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.3 ஆயிரத்து 464-ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை, கிராமுக்கு 90 காசும், கிலோவுக்கு ரூ.900-ம் அதிகரித்து, ஒரு கிராம் 71 ரூபாய் 10 காசுக்கும், ஒரு கிலோ ரூ.71 ஆயிரத்து 100-க்கும் விற்பனை ஆனது.