உலக செய்திகள்

பிரேசிலில் ஒரே நாளில் 57 ஆயிரம் பேருக்கு தொற்று; பாதிப்பு 26 லட்சத்தை கடந்தது + "||" + 57 thousand people infected in a single day in Brazil; The impact has crossed 26 lakhs

பிரேசிலில் ஒரே நாளில் 57 ஆயிரம் பேருக்கு தொற்று; பாதிப்பு 26 லட்சத்தை கடந்தது

பிரேசிலில் ஒரே நாளில் 57 ஆயிரம் பேருக்கு தொற்று; பாதிப்பு 26 லட்சத்தை கடந்தது
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளில் இரண்டாவது இடத்தில் பிரேசில் தொடர்கிறது.
பிரேசிலியா,

பிரேசிலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 57 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு தொற்று பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 10 ஆயிரத்து 100-ஐ கடந்தது.

ஒரே நாளில் 1,129 பேர் பலியாகினர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 91 ஆயிரத்து 263 ஆக உயர்ந்தது.

ஏறத்தாழ 18 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின்னர் கொரோனாவில் இருந்து மீண்டு இருக்கிறார்கள்.

புதன்கிழமையன்று அங்கு ஒரே நாளில் 69 ஆயிரத்து 74 பேருக்கு தொற்று ஏற்பட்டதும், 1,595 பேர் பலியானதும் நினைவுகூரத்தக்கது.

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோவின் மனைவி மிச்செல்லிக்கும், அந்த நாட்டின் அறிவியல், தொழில் நுட்பத்துறை மந்திரி மார்கோஸ் பாண்டெசுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 2 கோடியை கடந்தது
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை உறுதி செய்வதற்காக நடத்தப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது.
2. ஒரே நாளில் 200 பேருக்கு தொற்று - கொரோனாவுக்கு முதியவர் பலி
புதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.
3. திருவாரூர் மாவட்டத்தில், ஒரே நாளில், 100 பேருக்கு கொரோனா தொற்று - மேலும் ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
4. ஒரே நாளில் 2,396 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா தொற்று 56 ஆயிரத்து 845 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 103 குழந்தைகள் உள்பட 2,396 பேர் பாதிக்கப்பட்டனர். தொற்று எண்ணிக்கை 56 ஆயிரத்து 845 ஆக அதிகரித்து உள்ளது. கர்ப்பிணி பெண் உள்பட 38 பேர் பலியாகினர்.
5. தஞ்சையில், பாதிப்பு 100-ஐ தாண்டியது: ஒரே நாளில், ராணுவ வீரர்-கர்ப்பிணி உள்பட 10 பேருக்கு கொரோனா
தஞ்சையில், பாதிப்பு 100-ஐ தாண்டியது. ஒரே நாளில், ராணுவ வீரர்-கர்ப்பிணி உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.