உலக செய்திகள்

முதல் முறையாக அமெரிக்காவில் கொரோனா பாதித்த செல்ல நாய் பலி + "||" + Corona infected pet dog dies for the first time in US

முதல் முறையாக அமெரிக்காவில் கொரோனா பாதித்த செல்ல நாய் பலி

முதல் முறையாக அமெரிக்காவில் கொரோனா பாதித்த செல்ல நாய் பலி
முதல் முறையாக அமெரிக்காவில் கொரோனா பாதித்த செல்ல நாய் பலியாகி உள்ளது.
வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் தொற்று, மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.

விலங்குகளிடம் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுமா என்பது தெரியவில்லை. அதற்கு உறுதியான ஆதாரங்களும் இல்லை. ஆனால் சில சூழ்நிலைகளில், மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு அதிலும் குறிப்பாக செல்லப்பிராணிகளுக்கு கொரோனா பரவும் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது.

ஹாங்காங்கில் 2 நாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியது தொடர்பான தகவல்கள் கடந்த மே மாதம் ‘நேச்சர்’ பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது இப்போது அமெரிக்காவுக்கும் பொருந்துகிறது. அங்கு முதல்முறையாக செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த ஜெர்மன் ஷெப்பேர்டு நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதை அமெரிக்காவின் விவசாயத்துறை மற்றும் தேசிய கால்நடை சேவைகள் ஆய்வகங்கள் கடந்த ஜூன் மாதம் அறிவித்தன. இந்த நாய்தான், அமெரிக்காவில் முதன்முதலாக கொரோனா பாதிப்புக்கு ஆளான செல்லப்பிராணி என கூறப்பட்டது.

முன்னதாக அந்த நாயின் எஜமானர்களில் ஒருவரான ராபர்ட் மஹோனிக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன.

அவர்களிடம் இருந்து இந்த நாய்க்கு கொரோனா பரவி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இதையொட்டி நாய் எஜமானர்கள், நேஷனல் ஜியாக்ரபிக் டி.வி. சேனலிடம் கூறும்போது, “ எங்கள் நாய்க்கு ஏப்ரல் மத்தியில் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. (இதற்கு முன்பாகவே ராபர்ட் மஹோனியாக்கு பல வாரங்களாக தொற்று இருந்து வந்திருக்கிறது.) தொடர்ந்து மூச்சு திணறல், சளியால் நாயின் உடல் நிலை சீராக பாதித்து வந்தது” என குறிப்பிட்டனர்.

கடந்த 11-ந் தேதி ரத்த வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து அந்த நாயை கருணைக்கொலை செய்து சாகடித்தனர்.

அந்த நாயின் மரணத்தில் கொரோனா வைரஸ் தொற்று முக்கிய பங்கை கொண்டிருந்ததா என்பது தெரிய வில்லை என்றபோதிலும் ரத்த பரிசோதனைகள் அதற்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தில் புற்றுநோய் ஏற்பட்டிருந்ததை காட்டியதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே கொரோனா தொற்றின் மையமாக அமெரிக்கா மாறிவருகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட வண்ணமாக உள்ளது. பலி எண்ணிக்கைக்கும் குறைவில்லை. நேற்று மதிய நிலவரப்படி அங்கு கொரோனா தொற்று 44 லட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதித்திருக்கிறது. 1 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இது அமெரிக்க மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 16 ஏரிகளை வெட்டிய சமூக ஆர்வலர்: கொரோனா பாதித்த கல்மனே காமேகவுடா உடல் நிலை கவலைக்கிடம் - தரமான சிகிச்சை அளிக்க குமாரசாமி வலியுறுத்தல்
16 ஏரிகளை வெட்டிய சமூக ஆர்வலரான கல்மனே காமேகவுடா உடல் நிலை கவலைக்கிடமாகி உள்ளது. இதனால் அவருக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அரசை குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
2. கொரோனா பாதித்த 22 நோயாளிகளிடம் இருந்து ரூ.24 லட்சம் வசூல் கூடுதல் கட்டணத்தை திரும்ப வழங்க மருத்துவமனைகளுக்கு உத்தரவு - போலீஸ் ஐ.ஜி. ரூபா தகவல்
பெங்களூருவில் கொரோனா பாதித்த 22 நோயாளிகளிடம் இருந்து ரூ.24 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணத்தை திரும்ப வழங்கும்படி மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் ஐ.ஜி. ரூபா தெரிவித்துள்ளார்.
3. டெல்லியில் கொரோனா பாதித்த டீன் ஏஜ் சிறுமியை கற்பழித்த மற்றொரு நோயாளி
டெல்லியில் கொரோனா பாதித்த டீன் ஏஜ் சிறுமியை மற்றொரு நோயாளி கற்பழித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
4. கொரோனா பாதித்த நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆரத்யா மருத்துவமனையில் அனுமதி
கொரோனா பாதித்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
5. கொரோனா சிகிச்சை மையத்தில் பெண் கற்பழிப்பு; கைதான குற்றவாளிக்கு பாதிப்பு
மராட்டியத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் கைதான குற்றவாளிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.