உலக செய்திகள்

அமெரிக்காவில் நிமிடத்துக்கு ஒருவர் கொரோனாவால் பலி + "||" + One person per minute is killed by corona in the United States

அமெரிக்காவில் நிமிடத்துக்கு ஒருவர் கொரோனாவால் பலி

அமெரிக்காவில் நிமிடத்துக்கு ஒருவர் கொரோனாவால் பலி
அமெரிக்க நாட்டில் நிமிடத்துக்கு ஒருவர் கொரோனா பாதிப்புகளால் பலியாகின்றனர்.
வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்ந்து வெறியாட்டம் போடுகிறது. அங்கு நேற்று மாலை நிலவரப்படி தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 46 லட்சத்து 38 ஆயிரத்து 288 ஆக இருந்தது. பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 371 ஆக பதிவாகி இருந்தது.

கலிபோர்னியா, புளோரிடா, டெக்சாஸ் மாகாணங்களில் பலியில் தினமும் புதிய உச்சம் காணப்படுகிறது.

அமெரிக்காவில் கடந்த 2 நாட்களாக சராசரியாக 1,400-க்கு மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். இது, நிமிடத்துக்கு ஒருவர் பலி என்ற அளவில் இருக்கிறது. நேற்றும்கூட புளோரிடாவில் மட்டுமே 257 பேர் பலியாகினர்.

இதற்கு மத்தியில் அங்கு நவம்பரில் கொரோனா இறப்பு அளவு 2 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்து விடும் என்று ஒரு ஆய்வு முடிவில் தெரிய வந்து மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் 52 பேருக்கு கொரோனா பாதிப்புகள் இருப்பது உறுதி
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரிசோதனையில் 52 பேருக்கு பாதிப்புகள் இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளன.
2. கொரோனா பாதிப்புகள்: ரஷ்யா தனது இறப்பு விகிதத்தை குறைத்து காட்டுவதாக குற்றச்சாட்டு
கொரோனா பாதிப்புகள் தொடர்பாக, ரஷ்யா தனது இறப்பு விகிதத்தை குறைத்து காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
3. கொரோனா பாதிப்புகள்: ஓராண்டுக்கு தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை விட்டு கொடுக்க ஜனாதிபதி முடிவு
கொரோனா பாதிப்புகளுக்காக, ஓராண்டுக்கு தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை விட்டு கொடுக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார்.
4. கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் ஊரடங்கை தளர்த்தும் பாகிஸ்தான் அரசு
கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் ஊரடங்கை தளர்த்த உள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
5. கொரோனா பாதிப்புகள் குறித்து ஆங் சான் சூச்சியுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா பாதிப்புகள் குறித்து மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சியுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.